முற்காலத்தில் எருக்கஞ்செடிகள் அதிகம் இருந்த காரணத்தால் எருக்கத்தம்புலியூர் என்று அழைக்கப்பட்டது. உருத்திரசன்மன் சிவபெருமானை வழிபட்டு தனது ஊமைத்தன்மை நீங்கப் பெற்றத் தலம். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலம். அவரது சன்னதி கோயிலுக்கு வெளியே குளத்தங்கரையில் உள்ளது.
சிறிய அழகிய சுவாமி மற்றும் அம்பிகை, சிறிய கோயில். கோயில் எதிரில் பெரிய குளம் ஒன்று உள்ளது. மார்ச் மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி (பங்குனி 3 முதல் 7) வரை சூரியன் சுவாமியை வழிபடும் காட்சியைக் காணலாம். பிரகாரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னதி உள்ளது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்ற தலம். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு : 93606 37784, 04143-243 533.
|